×

இதயம் தொடர்பான நோய்களுடன் இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது

ஐதராபாத்: இதயம் தொடர்பான நோய்களுடன் இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது என்று இருதயவியல் துறை ஆலோசகர் தெரிவித்தார்.

டெல்லி சி.கே.பிர்லா மருத்துவமனையின் இருதயவியல் துறை ஆலோசகர் சஞ்சீவ் குமார் குப்தா அளித்த பேட்டியில்;
இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்களுடன் பிறக்கின்றனர். ஆனால், பிறவியிலேயே வரும் இதய நோயால் பெரும்பாலும் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. குழந்தைகளுக்கு ஏற்படும் இதுபோன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

இந்த இதயக் குறைபாடுகள் நுரையீரல் வழியாக அசாதாரண முறையில் ஓடும் ரத்த ஓட்டம், விரைவான சுவாசம், எடை அதிகரிப்பு, தோல் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் மூலம் தெரியும். மேலும் வளர்ச்சியின்மை, தலைவலி, நகங்கள் மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல், மார்பு தொற்று போன்ற அறிகுறிகள் மூலமும் இதய நோயாளியை கண்டறிய முடியும். வயதுக்கு ஏற்ப குறைபாடுகள் வலுவடைகின்றன. அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, கர்ப்ப காலத்தில் நோய் கண்டறியப்படாமை மற்றும் தாய்வழி தொற்று ஆகியவை இதயம் தொடர்பான நோய்களுக்கு காரணமாக உள்ளன என்றார்.

The post இதயம் தொடர்பான நோய்களுடன் இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது appeared first on Dinakaran.

Tags : India ,Hyderabad ,Department of Cardiology ,Delhi C. K. ,Sanjeev Kumar Gupta ,Birla Hospital ,
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...